The National Peace Council (NPC)

si  engettamil

19 ஆவது திருத்தம் கொண்டு வருவதை ஒத்தி வைக்க வேண்டிய நிலையில் அரசு

அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவசர அவசரமாக யாப்பில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற செய்த திட்டமானது தாமதமாவதற்கான காரணம் விளக்கப்படாதுள்ளது. இதன் காரணமாக இத் திருத்தத்தினை தற்காலிகமாக குறைந்த பட்சம் இப் போதைக்காவது அரசாங்கம் கொண்டு வராது ஒத்திப் போடலாம் என்ற அபிப்பிராயம் உருவாகியூள்ளது. 

13 ஆவது திருத்தத்தினை பலவீனப்படுத்தக் கூடியதான இந்த 19 ஆவது திருத்தத்திற்கு நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களது அரசியற் கட்சிகளும் அரசாங்கத்தில் உள்ள இடது சாரிகட்சிகளும் கூட எதிர்ப்பு காட்டி வருகின்றன. இதிலிருந்து அரசாங்கத்திற்கு உள்ளேயே உள்ள அதிருப்தி தான் இத் தாமதத்திற்கு காரணம் என்பது புலனாகின்றது. ஆனாலும் பாராளுமன்றத்தில் எவ்வாறு மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றுக் கொள்ள முடியூம் என்பது பற்றி தனக்குத் தெரியூம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறியூள்ளார் என்பதனையூம் கவனிக்கத் தவறக் கூடாது.
இவ்வாறான ஒரு கருத்தைக் கடந்த வாரம் பாராளுமன்ற செயலகத்தில் நடைபெற்ற அரசாங்க பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் அவர் மீண்டும் கூறி உறுதி செய்துள்ளார். அதற்காக தேவைப்படும் பட்சத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களது ஆதரவினையூம் தன்னால் பெற்றுக் கொள்ள முடியூம் என்றும் அவர் கூறத் தயங்கவில்லை.
எனவேஇ இப்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வெளிக் காரணிகளை விட அரசாங்கத்திற்கு உள்ளே உள்ள சில சக்திகளே தாமதத்திற்கான காரணமாக உள்ளன என்பது தெரியவருகிறது. இலங்கையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் இந்தியா தனது அதிருப்தியினை தௌpவான முறையில் வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்திய அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையிலிருந்து இது ( அதிருப்தி) நன்கு தெரியவருகிறது. இலங்கை யாப்பினுள் அதுவூம் எதிர்வரும் செப்டெம்பர் மாத வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னராக இலங்கை அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில பிரதான அதிகாரங்களை மழுங்கடிக்கச் செய்யக் கூடிய வகையில் ஒரு புதிய திருத்தம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்ட செய்திகள் அறிந்து தான் (பாரதப் பிரதமர்) திகைப்படைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளிடம் கூறியதாகவூம் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
இந்தியாவிடமும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் இலங்கை அரசாங்கம் தான் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பாலும் சென்று ஒரு அரசியல் தீர்வினை கொண்டு வர தன்னை அர்ப்பணித்துள்ளதாக கூறியமை பொறுத்து இப் புதிய 19 ஆவது திருத்தச் சட்டம் சந்தேகங்களை எழுப்பியூள்ளதாகவூம் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் உருவாக்கிய கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு (க.பா. ந.ஆ) தனது அறிக்கையில் கூறியூள்ள சிபாரிசுகளில் ஒன்றான மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் மேலதிகமாக வழங்கப்படல் வேண்டும் என்ற கருத்துக்கு முரணான தாகவூம் புதிய மாற்றங்கள் (19 ஆவது திருத்தம் ) பொருத்தமற்றதாகவூம் அமையூம்.
எதிர்க் கட்சிகளின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் 19 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமையூம் இந்திய அரசாங்கத்தின் ஆர்வங்களை அவர் பலமாக பிரதிபலிக்கின்றமையினைக் காட்டுகின்றது. நாம் சர்வதேச சமூகங்களிடம் காட்டிய அர்ப்பணிப்புகளை மதித்து செயற்பட வேண்டும் என்றும் அவ்வாறான அர்ப்பணிப்பு உறுதிமொழிகளிலிருந்து விலகிச் செல்லக் கூடாது என்றும் கூறியதோடு ஏற்கனவே அரசாங்கம் கூறியிருந்த உறுதிமொழிகளிலிருந்து தன்னிச்சையாக பின் வாங்குவதோ அல்லது ஆரம்பித்தவாறே தொடராது விடுவதோ பெரும் பாவச் செயலாகும் என்றும் கூறினார்.
இவை மாத்திரமன்றி இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கியிருந்த உறுதி மொழிகளை காப்பாற்ற தனது கட்சி அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்கும் என்றும் கூறியிருக்கிறார். எதிரணியின் தலைவர் ஒரு ஒழுக்கமிக்க பண்பினதான முறையில் தனது கருத்தை பலமாக கூறியூள்ளமையிலிருந்து சர்வதேச சமூகத்திடமும் இலங்கைக்குள் வாழும் சிறுபான்மை இனத்தவரிடையேயூம் இலங்கை அரசாங்கம் மீதான நம்பிக்கை எந்தளவூக்கு அருகிப் போயூள்ளது என்பதனையூம் அதனை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை பற்றியூம் விளங்கிக் கொள்ளக் கூடியதாயூள்ளது.
இன்றைய அரசியலில் பிரபல்யமானது
மாகாண சபைகளுக்கு கிடைக்கக்கூடிய பொலிஸ் மற்றும் காணிகள் தொடர்பான அதிகாரங்கள் இ ஒன்றுக்கு மேற்பட்ட மாகாண சபைகள் தமக்குள் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்ள கொண்டுள்ள அதிகாரங்கள் மற்றும் அம் மாகாண சபைகளை பாதிக்கக் கூடும்.

OUR DONORS & PARTNERS

 
 
You are here: Home வெளியீடு அச்சுப்பதிப்பு News in Tamil 19 ஆவது திருத்தம் கொண்டு வருவதை ஒத்தி வைக்க வேண்டிய நிலையில் அரசு

Connect with us

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization...

Read More

Contact Information

Address: 12/14, Balapokuna Vihara Rd, Colombo 06
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Phone: +94 11 281 8344, +94 11 285 4127, +94 11 280 9348
Fax: +94 11 281 9064


david-kilgour   |   writetoreconcile  |   www.outoftheframe.lk