The National Peace Council (NPC)

si  engettamil

மக்கள் மத்தியில் தொடர்ந்து வளர்த்துவிடப்படும் பிரிவினை

மே மாதம் 18 ஆம் திகதியினை நாட்டின் வெற்றி தினமாகவும் இரண்டாவது சுதந்திர தினமாகவும் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளமை காரணமாக இலங்கை மக்களை வேறான துருவங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. நாட்டின் ஆட்சி பரப்பை அரசாங்கம் முறையாக திட்டமிட்டபடியோ அல்லது தற்செயலாகவோ மீண்டும் ஐக்கியப்படுத்தியமையுடன் இணைந்ததாக அரசாங்கத்தினால் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் மத்தியில் பிரிவினை வளர்த்துவிடப்படுகின்றது. இலங்கையின் நவீன கால வரலாற்றில் ஒரு நீர்பிரிமேடு போன்ற அடையாளத்தை ஏற்படுத்தும் நாளாக உருவாக்கப்பட்ட தினத்தன்று நான் மன்னாரில் இருந்தேன். அப்போது இலங்கை மக்கள் பிரிவுக்குட்பட்டவர்களாக இருந்ததனை அவர்களுடைய மனோபாவங்களிலிருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இழப்புகளை எண்ணிய முறையிலான இரங்கல் கூட்டமாக ஒரு நினைவு தினம் அங்கே நினைவு கூரப்படவில்லை. சுதந்திரத்தின் பின்னர் ஒரு பிரிவினை வாதத்தின் சிந்தனை மீண்டும் புதுப்பலம் பெற்று வருவதாகவே தென்பட்டது. 

கொழும்பில் அரசாங்கம் இராணுவ அணி வகுப்பு வான, கடல்சார் சாகசங்களைச் செய்து காட்டி கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் மன்னாரில் யுத்தத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களின் பழைய துயர நினைவுகள் நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவுபடுத்தும் நோக்குடன் கூடியிருந்த மக்கள் குழுவினை துப்பாக்கி முனையில் இராணுவமும் பொலிஸாரும் அவ்வாறு நினைவு கூர்வதனை தடுத்து நிறுத்தினர். அவர்களில் 15 பேரை கைது செய்து பின்னர் கடந்த 19 ஆம் திகதி பின்னிரவிலேயே விடுவித்திருந்தனர். எவரேனும் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுபடுத்தும் கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தினால் அது சட்டவிரோதமானதாகக் கருதப்பட்டு கைது செய்யப்படுவர் என அரசாங்க ஊடகங்கள் மூலம் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இருந்த போதிலும் யுத்தத்தின் இறுதி காலக் கட்டத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்திருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதியுயர் தலைமைத்துவம் அப்போது தான் கொலை செய்யப்பட்டிருந்தார். இவ்வாறான பின்னணியில் மன்னாரில் கத்தோலிக்க தேவாலயத்தினால் யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவு கூர்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானம் நடைமுறை சாத்தியமானதாகும். தமிழ் மக்கள் தமது அன்புக்குரியவர்கள் கொல்லப்பட்டதனை நினைவு கூர முற்பட்டபோதெல்லாம் அரசாங்கம் அதனை தடை செய்யவே எத்தனித்து வந்துள்ளது. பொதுமக்கள் கொல்லப்பட்டமைக்காக தமிழ் மக்கள் நினைவு கூர்வதாக கூறப்படும் போர்வையில் செய்யப்படும் நினைவு கூர்தல் நிகழ்ச்சிகள் தொடர்பில் எப்போது இராணுவம் அது தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதாகவே எண்ணி அவற்றை தடை செய்யவே முயன்று வந்துள்ளது. இருந்த போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் பொது மக்கள் ஆகிய இருசாராரையும் கலப்பாக எண்ணி ஏற்படும் குளறுபடிகள் காரணமாக ஏற்படும் முரண்பாடுகளே இவை என்பது தான் யதார்த்தமாகும். குறிப்பாக கூறுவதானால் யுத்தத்தின் இறுதி கால கட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சிறுவர்களை அதுவும் குறிப்பாக 12 வயதுக்கும் குறைந்தவர்களை, தமது படைக்கு பலவந்தமாக சேர்த்துக் கொண்டனர். இதில் மன்னார் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களும் உள்ளடங்குவர்.
ஒன்றுக்குகொன்று
எதிரான யதார்த்தங்கள்
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் மன்னார் மாவட்டத்திலேயே அங்கு வாழும் சனத்தொகையில் பெரும்பான்மையினர் கத்தோலிக்க மதத்தை சார்ந்தவர்களாவர். இவ்வாறான கலாசார தனிப் பண்புகள் நாட்டின் சமய, கலாசார பன்முகத் தன்மைகளை காட்டுவன. அவற்றை எமது பலமாகக் கருதி பாதுகாக்க வேண்டுமே தவிர பலவீனமாகக் கருதி நடத்தலாகாது.
தமிழ் அரசியல் தலைவர்கள் யுத்தத்தின் போது தமிழ் மக்கள் மத்தியிலிருந்தவர்கள் கொல்லப்பட்டமையினை நினைவு கூர்ந்து துக்கம் அனுஷ்டிக்கப்பட வேண்டுமெனக் கூறியது போலல்லாது மன்னார் பேராயர் யுத்தத்தின் போது இறந்த தமிழ் மக்களை மாத்திரமன்றி போரின் போது கொல்லப்பட்ட அனைத்து இன மக்களையும் நினைவு கூர்ந்து நினைவு நாளை அýஷ்டிக்குமாறு அங்குள்ள மத குருமார்களைக் கேட்டுக் கொண்டார். இதன் விளைவாக யுத்தத்தின் போது கொல்லப்பட்ட சிங்கள, தமிழ் , முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த அனைவரும் நினைவு கூரப்பட்டதுடன் போராளிகளான அரச படையினர், தமிழீழ விடுதலைப் புலிகள் யாவருமே நினைவு கூரப்பட்டனர். இலங்கையில் பல்வேறுபட்ட இனப் பண்பினை கவனத்திற் கொண்டவகையில் சிறுபான்மை குழுவொன்று இவ்வாறு அனைத்து சாராரையும் நினைவுபடுத்தியமை ஒரு புதிய ஏற்பாடாகக் கருதப்படலாம். இவ்வாறான ஒரு பெயர் சிந்தனையையே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவும் தனது சிபாரிசுகளில் ஒன்றாக கூறியிருந்தது.
அரசாங்கம் இவ்வருடம் தனது வெற்றிக் கொண்டாட்டத்தின் போது படை வீரர்களது வீரத்தின் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளை முழுமையாக வெற்றி கொண்டமை தொடர்பிலுமே தனது முழு கவனத்தினையும் குவியச் செய்திருந்தது. இராணுவ அணி வகுப்பினைப் பார்த்து ரசித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாட்டைப் பிரிக்க நினைத்தவர்களுக்கு நாட்டில் எந்த இடமும் இல்லை என சபதம் செய்தார். படை வீரர்களை நோக்கி நீங்கள் உங்கள் உயிரைப் பணயமாக வைத்து வெற்றி பெற்ற நிலைப்பரப்பில் ஒரு அங்குல நிலைத்தையேனும் எவரிடமும் விட்டுக் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என சூளுரைத்தார். கடந்த இரண்டு வாரங்களாக பொது சன ஊடகங்களில் இரத்தமும் குண்டுகளும் சிதறிய காலப் பகுதிகள் அடிக்கடி நினைவுபடுத்தப்பட்டுக் கொண்டும் அவற்றிற்கு எவ்வாறு முடிவு கொண்டு வரப்பட்டது என்பதும் மக்களிடம் திறமையான முறையில் நினைவுபடுத்திக் காட்டப்பட்டு வந்தன. தற்போது நிலவிவரும் அமைதியான நிலைவரம் காரணமாக நன்றியுணர்வுடைய தேசம்

OUR DONORS & PARTNERS

 
 
You are here: Home வெளியீடு அச்சுப்பதிப்பு News in Tamil மக்கள் மத்தியில் தொடர்ந்து வளர்த்துவிடப்படும் பிரிவினை

Connect with us

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization...

Read More

Contact Information

Address: 12/14, Balapokuna Vihara Rd, Colombo 06
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Phone: +94 11 281 8344, +94 11 285 4127, +94 11 280 9348
Fax: +94 11 281 9064


david-kilgour   |   writetoreconcile  |   www.outoftheframe.lk