The National Peace Council (NPC)

si  engettamil

காணாமல் போனோரை தேடும் பணி இன்னும் பல வருடங்கள் தொடரலாம்

ஜனநாயகத்தின் செயற்பாட்டோடு தொடர்புடையதான பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் வழிநடாத்துவதற்கான சுதந்திரம் இன்னும் கணிசமான அளவிற்கு நாட்டில் நிலவி வருவதாகவே கூறலாம். பிரட்ரிக் நோமன் மன்றத்தின் பணிப்பாளரை அரசாங்கம் அண்மையில் விசாரிக்கத் தீர்மானித்தமையானது, இலங்கையில் நல்லாட்சி தொடர்பில் இலங்கையில் செயற்படும் சர்வதேச நிறுவனங்களுக்கு அவர்கள் ஒரு அளவிற்கு அப்பால் எல்லை மீறிச் செயற்படக் கூடாது என எச்சரிப்பதான நோக்கமாகக் கொண்டது என்பதையே காட்டுகிறது. 

அண்மையில் இந்நிறுவனம் இலங்கையின் எதிர்க் கட்சிகளைச் சார்ந்த பாராளுமன்றப் பிரதிநிதிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலர்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் தேர்தல் பிரசாரங்களைச் செய்யலாம் என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து நடத்தியமையை அடுத்தே இவ்வாறான விசாரணை இடம்பெற்றுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்டம் தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொண்டதன் காரணமாகவே இந்நிறுவனத்தை புலனாய்வுக்குட்படுத்த வேண்டியதாயிற்று என அரசாங்கத் தரப்பில் இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னாள் முரண்பாட்டு வலயங்களான வடக்கிலும் கிழக்கிலும் ஒழுங்கு முறையிலான வகையில் அரசாங்கம் தனக்கு எதிரான சதித்திட்டங்களைக் கையாளத் தயாராக உள்ளமையினை இது காட்டுவதாக உள்ளது. நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் முற்றிலும் வேறுபட்ட கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு முறைகள் அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகின்றன. அவ்வாறான முறைகள் நாட்டின் ஏனைய பகுதிகளில் காணக் கூடியதாக இல்லை. சிவில் அமைப்புகளும் அரசுசாரா நிறுவனங்களும் மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அவை அரசாங்கத்தின் சிறப்பு நிறுவனங்களிடமும் மற்றும் அப்பிரதேச இராணுவத்திடமும் முன்னராகவே அனுமதி பெற்றே செயற்பட வேண்டும். தமிழீழ விடுதலைப்புலிகள் அவர்களில் எஞ்சியவர்கள் மற்றும் வெளிநாடு சென்று வாழும் தமிழர்களால் நாட்டைப் பிரிப்பதற்கான நோக்கங்கள் இன்றும் செயற்படுவதன் காரணமாகவே இவ்வாறான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் பின்பற்றப்படுவதாக அரசாங்கப் பேச்சாளர்கள் இவற்றை நியாயப்படுத்தி வருகின்றனர். ஆனால், இவற்றைவிட அரசாங்கத் தலைவர்கள் தமது பாதுகாப்புத் தொடர்பிலான அக்கறை காரணமாகவே அவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க முற்படுகின்றனர் என்பதும் கவனிக்க வேண்டியதொன்றாகும்.
நாட்டின் வட பகுதி யுத்த களத்தில் அதன் இறுதிக் காலகட்டங்களில் இடம் பெற்றவை பற்றிய தகவல்கள் வெளிச் சென்றுவிடக் கூடாது என்பதில் அரசாங்கம் பெரிதும் அக்கறையாயிருந்தது. இதன் காரணமாக சர்வதேச மனிதாபிமான நோக்கங்களைக் கொண்ட நிறுவனங்களின் போர்க் களப் பகுதிகளை விட்டுப் போரின் போது வெளியேறிவிடுமாறு அரசாங்கம் கோரியிருந்தது. இதற்கு அந்நிறுவனங்களது பாதுகாப்பே தனது நோக்கம் என அரசாங்கம் கூறிக் கொண்டது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பல்வேறு செய்திகளும் அச் செய்திகளுக்கு எதிரான செய்திகளும் வெளிவந்திருந்தன. யுத்தம் முடிவுற்றதன் பின்னரும் கூட நாட்டில் யுத்தம் நடைபெற்றதான வடக்குக், கிழக்குப் பகுதிகளில் மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான நிறுவனங்கள் செயற்படுவதில் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் நிலவின.
இவை யாவற்றிற்கும் யுத்த களத்தில் ஏற்பட்ட அதுவும் குறிப்பாக யுத்தக் குற்றங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் யாவற்றையும் அரசாங்கம் முற்றாக மறைத்து மூடிவிட விரும்பியமையே காரணமென்பது தெளிவாகிறது. உண்மையான நோக்கம் சர்வதேச சமூகத்தின் சில பிரிவினர் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற பெரியளவிலான மனித உரிமை மீறல்களைக் கண்டறிவதற்கான சர்வதேச புலனாய்வுப் பொறி முறைகளுடன் இலங்கைக்குள் வருவதனை பொறுத்தே இலங்கை அரசாங்கம் பெருமளவில் எச்சரிக்கையாயிருந்து. அவர்கள் வருவதனை தடை செய்வதில் கவனமாகச் செயற்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த தகவல் திரட்டும் குழு இவ்வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் இலங்கை வருகை தந்திருந்த போது, இலங்கையின் வடபகுதி யுத்தத்தின் இறுதி காலகட்டத்தின் போது நடந்தவை என்ன என்பதைப் பற்றி புலனாய்வு செய்வதற்காக சுதந்திரமான சர்வதேச புலனாய்வுப் பொறி முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும் எனச் சிபாரிசு செய்திருந்தது. இவ்வருடம் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்த குற்றச்சாட்டுகள் மீண்டும் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டது. வட பகுதி யுத்தகளத்தில் அப்போது நடந்தவை என்ன என்னும் வினா எழுப்பப்பட்டுக் கொண்டிருப்பதால் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் அதன் மனதை நெருடுவதாக இருந்து வருகிறது.
இறுதியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் ஐக்கிய அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் இலங்கையின் மறுப்புகளுக்கும் மத்தியிலும் பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தினை (யுத்த குற்றங்கள்) மீறியமை தொடர்பில் அரசாங்கத்தை (இலங்கை) சுதந்திரமான புலனாய்வு ஒன்றினை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமை அத்தீர்மானத்தில் உள்ளடங்கும் பல சரத்துகளில் ஒன்றாகும். இத்தீர்மானத்தின் காரணமாக இலங்கையில் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்துவிடப் பங்காற்றிய ஆயுதப்படையினை மற்றும் அரசாங்கத் தலைவர்களைப் பாதுகாப்பதில் பெரும் அக்கறை கொண்டுள்ள அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அத்துமீறல்கள் பற்றி பெரிதும் வரையறைக்குட்பட்ட வகையிலேயே இதில் அக்கறை காட்டப்பட்டிருந்ததாகவும் வெறுப்படைந்திருந்தது. யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் காரணமாக அவர்களையும் அவர்களுக்கு நிதி மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவு வழங்கியவர்களையும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்க முடியாது. யுத்தத்தினை ஏற்படுத்தும் தவறினைச் செய்தவர்களையும் அதற்கு காரணமாயிருந்தவர்களையும் முழுமையாக உள்ளடக்கிய வகையிலான ஓர் அணுகுமுறையே இதற்காகப் பின்பற்ற வேண்டியுள்ளது.
மார்கா நிறுவனம் அண்மையில் “எண்ணிக்கைகளின் விநோதம் தண்டனை வழங்கும் நீதியின் அரசியல்“ (“கூடஞு Nதட்ஞஞுணூண் எச்ட்ஞு கூடஞு கணிடூடிtடிஞிண் ணிஞூ கீஞுtணூடிஞதtடிணஞு ஒதண்tடிஞிஞு“) என்னும் தலைப்பில் கலந்துரையாடல் ஒன்றினை நடாத்திய போது இவை பற்றிய கருத்துக்களை மிகவும் வலிமையான முறையில் வெளிக்கொணர்ந்தது. 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்நிறுவனம் பொறுப்பு கூறும் பிரச்சினைகள் தொடர்பிலான ஐ.நா.சபை செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழு அறிக்கை பற்றியும் ஒரு கருத்தரங்கத்தை நடத்தியிருந்தது (தரூஸ்மன் அறிக்கை). மீண்டும் ஒரு முறை தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்ட பாதிபுக்கள் மற்றும் மனிதத்துயரங்கள் தொடர்பில் மேலும் கூடிய தகவல்களைப் பெறுவதன் முக்கியத்துவம் பற்றிய கருத்தரங்கத்தை இந்நிறுவனம் நடாத்தியுள்ளது. பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகள், மனிதாபிமான சட்டம், நட்டஈடு வழங்குதல் மற்றும் நல்லாட்சி என்பவற்றின் மூலமாக நல்லிணக்கம் ஏற்படுவதனை கவனத்திற் கொண்டதான 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகிய கற்றுக் கொண்ட பாடங்களுக்கு நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கையின் உணர்வுகளை கவனத்திற் கொண்டதாக இக்கருத்தரங்கம் இடம்பெற்றது.
எண்களுக்கு பின்னால்
ஐக்கிய நாடு சபையிடம் இலங்கை அரசாங்கம் யுத்ததின் போது ஏழாயிரம் பேர் மட்டுமே கொல்லப்பட்டிருக்கலாம் என மதிப்பு கூறியிருந்ததனை மன்னார் பேராயர் யுத்தத்தின் போது யுத்த வலயத்தில் சிக்கிக்கொண்ட 146,000 பேர் பற்றிக் கணக்கு தெரியாதுள்ளது எனக் கூறுவதனை கவனத்திற்கொண்டு பார்க்கையில் பாதிப்புக்குள்ளாகிய பொதுமக்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகளில் பெரும் வேறுபாடு காணப்படுவது தெளிவாகிறது. சரியான எண்ணிக்கை பற்றித் தெரியவருவதில் பெரும் இடையூறுகள் இருப்பதாக மார்கா கருத்தரங்கில் எடுத்தக் கூறப்பட்டது. யுத்த காலத்தின்போது உள்ளூராட்சி சபைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலே இருந்ததால், அவர்கள் கூறும் தரவுகள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதால் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கையில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் நேர்முக கணிப்பீடு செய்யப்படல் வேண்டும் என்னும் சிபாரிசு கூறப்பட்டுள்ளது. சில குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கலாம் வேறு சிலர் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்திருக்கலாம். இவ்வாறான குடும்பங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றித் தகவல் கூற எவரும் இருக்க மாட்டார்கள் என்பதால் பாதிக்கப்பட்ட குடும்பமட்ட தகவல் சேகரிப்பும் சரியான தகவலைத் தரலாம் எனக் கூறமுடியாது என்று கருத்தும் கூறப்பட்டது.
20,000 முதல்40,000 பேர் வரையான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்னும் முன்னைய மதிப்பீடு இப்போது சர்வதேச மட்டத்தில் கவனத்திற்கொள்ளப்பட்டு 40,000 பேர் அவ்வாறு யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மார்கா கருத்தரங்கில் எந்தவொரு எண்ணிக்கையும் சரியானதென ஏற்றுக் கொள்ளப்படாத போதிலும் அப்போது கொண்டுவரப்பட்ட ஒரு முக்கிய கருத்து கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். காணாமற்போன அல்லது கொல்லப்பட்ட ஒவ்வொரு நபரது எண்ணிக்கைக்குப் பின்னாலும் துயரங்களினதும் இழப்புகளினதுமான துயரக் கதை விபரிக்கப்படக் கூடியதாயிருக்கும் என்பதே அக்கருத்தாகும்.
உலகில் நீண்டகாலமாக தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்டுவரும் புரட்சி பற்றிய கதைகளை ஒத்ததான துயரக் கதைகள் அவையாகும். முரண்பாடுகளுக்கான தீர்வு பற்றிய நூல் ஒன்றில் இத்துறைசார் நிபுணரான ஜோன்போல் லெடாரக் என்பவர் இது பற்றிக் கூறியுள்ளார். அந்நூலில் அந்நாட்டில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டதன் பின்னர் கொலம்பிய விவசாயி தனது கோப்பித் தோட்டத்திற்கு திரும்பி சென்றது பற்றிக் கூறப்பட்டுள்ளது. அப்படி அவ்விவசாயி தனது தோட்டத்தில் நடந்து சென்ற கொண்டிருந்தபோது நீண்ட காலத்திற்கு முன்னர் கொல்லப்பட்ட அவரது உறவினரது குரலில் “நான் இங்கிருக்கிறேன் என்னை வெளியே கொண்டு வா“ என ஒலித்ததாக கேட்டுக் கூறியிருக்கிறார். அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது அந்த உறவினரது எலும்புக்கூடு, அவரது ஆடைகள் என்பன காணப்பட்டிருந்தன.
யுத்தத்தின் போதானாலும் சரி அல்லது வழமையான வாழ்விலானாலும் சரி செத்தவர்கள் முற்றாக மறைந்து போய்விடுவதில்லை. எமது நினைவுகளில் இழைந்துக் கொண்டிருப்பர். யுத்தத்தின் இறுதி நாட்களின் போது காணாமற்போன தமது கணவர்கள் பற்றி ஐந்து பெண்கள் வவுனியா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர். இராணுவம் ஒலிபெருக்கியில் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் இருப்பார்களேயானால் தம்மிடம் அவர்கள் சரணடைந்தால் பாதுகாக்கப்படுவர் என அறிவித்ததனை அடுத்த அப்பெண்களின் கணவர்கள் இராணுவத்திடம் சரணடைந்ததை தாம் பார்த்ததாக முறைப்பாடு செய்துள்ளனர். 800 பேர் அவ்வாறு அப்போது பஸ்களில் ஏற்றப்பட்டுக்கொண்டு சென்றதாகவும் சரணடைவது தொடர்பில் அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்பும் அவர்களுடன் சென்று இன்றுவரை அவர்கள் யாவரும் என்ன ஆனார்கள் எனத் தெரியாதிருப்பதாக இப்பெண்கள் முறைப்பட்டனர். இதற்குப் பதிலழிக்க அரசாங்கத்திற்கு ஆறு வாரகால அவகாசம் கொடுக்கப்பட்டு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமது அன்புக்குரியர்களைத் தேடும் அவர்களது பணி மேலும் பல வருடங்களுக்குத் தொடரலாம். 198889 ஆண்டு காலப்பகுதியில் காணாமற்போன மக்கள் விடுதலை முன்னணியினரது உடல்களை மாத்தளையில் தோண்டிக் கொண்டிருக்கின்றோம். அன்புக்குரியவர்களை இழந்தவர்களது மனதை விட்டு அகலாத இத்துயரங்களை அரசாங்க நிறுவனங்கள் நீதியுடனும் இரக்கத்துடனும் அணுகுதல் வேண்டும். நாட்டின் நீதி வழங்கல்களுக்கான நீதிமன்றங்களுக்கு அரசாங்கத்தை இட்டுச் செல்லும் முயற்சிகள் அல்ல என்பதையும் இம்மக்கள் தமது இழப்புகளுக்காக நீதி கேட்கும் முயற்சிகள் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே மனித வரலாற்றின் ஆரம்பகால முதலாகவே மனித உணர்வுகளில் இருந்து வரும் குடும்ப உறவினர் மீதான அன்பு கொண்ட ஆழ்ந்த ஈடுபாடே இவை என்பதைவிட வேறெதுவும் உறவுகளை தேடும் இந்த உள்ளங்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.

OUR DONORS & PARTNERS

 
 
You are here: Home வெளியீடு அச்சுப்பதிப்பு News in Tamil காணாமல் போனோரை தேடும் பணி இன்னும் பல வருடங்கள் தொடரலாம்

Connect with us

About us

The National Peace Council (NPC) was established as an independent and impartial national non-government organization...

Read More

Contact Information

Address: 12/14, Balapokuna Vihara Rd, Colombo 06
Email: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
Phone: +94 11 281 8344, +94 11 285 4127, +94 11 280 9348
Fax: +94 11 281 9064


david-kilgour   |   writetoreconcile  |   www.outoftheframe.lk